12/31/12

தமிழ்ச் செடியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!




2012 நம்மை விட்டுப் பிரிந்து செல்கின்றது. 2013 இன்னும் சிறிது நேரத்தில் நம் கைகளில் தவழும் ஒரு குழந்தையாக. கடந்த வருடங்கள் இனிப்பான பல நிகழ்வுகளை விட சில கசப்பான நிகழ்வுகளை கடந்திருப்போம்! இந்த வருடமும் இன்பத்தையும் கடப்போம். துன்பத்தையும் கடப்போம் ஆனால் நினைவில் நிற்பது அதிகம் கசப்புகளே! கசப்பே வேண்டாம் என்பது உணவுக்கு மட்டும் உகந்ததல்ல, நம் உளவியலுக்கும் நல்லதல்ல. 

இந்த வருடத்தில் நாம் பல துன்பங்களை கண்டு துவழாமல் உற்சாகமாக போராடி வென்றிருப்போம். அதே போல் இந்த வருடமும் இறைவனை நாம் வேண்டுவது துன்பத்தை தாங்கும் வல்லமை தாராய் எனக் கேட்போம் அது போதும். 

சிறு துன்பதிற்கும் கலங்கிடும் மனம். எதிர்காலத்தில் கடினமான வாழ்க்கைச் சூழலில் கடப்பது சிரமம். ஆகவே திடமான மனமே தருவாய் என நம் பிராத்தனையாக இருக்கட்டும். 

அனைத்துப் பதிவுலக நண்பர்களுக்கும் தமிழ்ச்செடியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்! 

இப்படிக்கு

தமிழ்ச்செடி நண்பர்கள்

2 கருத்துரைகள்:

ஜோதிஜி on 1/01/2013 said...

அற்புதம்

cheena (சீனா) on 1/02/2013 said...

அன்பின் தமிழ்ச் செடி குழுவினரே - அருமையான் வாழ்த்தினிற்கு நன்றி - குழுவினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

 

மேலே செல்