12/10/12

தமிழ்ச்செடி - முதல் விழா (9-12-2012)சென்ற ஞாயிறு அன்று தொழிற்களம் நிறுவனர் திரு.ஈஸ்வரன் சீனிவாசன் அவர்களையும், தொழிற்களம் சார்பாக மக்கள் சந்தை.காம் என்ற நிறுவனத்தை  செயலாக்கத்தில் கொண்டு வந்து கொண்டிருக்கும் திரு. அருண் அவர்களை நானும் தேவியர் இல்லம் ஜோதிஜியும் சந்தித்தோம்.


எல்லாமே உறுதியான பிறகு ஒரு விதமான அச்ச உணர்வு என் மனதிலும் இரவு வானம் சுரேஷ் மனதிலும் இருந்தது காரணம் இது எங்களுக்கு முதல் விழா.

அது மட்டுமின்றி தமிழார்வம் மிக்க தொழிற்களம் நண்பர்கள் எங்களை நம்பி பங்கேற்றுள்ளார்கள் ஏதாவது சொதப்பிவிட்டால் அவ நம்பிக்கையைப் பெற்றுவிடுவோமோ..என்று  எங்கள் மனதை உறுத்திக் கொண்டேயிருந்தது.

எங்களை விட ஜோதிஜி மிக அழுத்தத்தில் இருந்தார் என்பது அவருடைய தொலைபேசியும், மின் மடல்களும் அறிவித்தன, தினமும் இரவு பன்னிரண்டு மணி ஒரு மணி என்கின்ற வேலைப்பளுக்களுக்கு இடையில் நிகழ்ச்சி தொடர்பான சில வேலைகளில் சுனக்கம் ஏற்ப்பட்டது!

பிறகு சென்னையிலிருந்து மெட்ராஸ்பவன் சிவக்குமாரும் ஆருர் மூனா செந்திலும் வருவதாக உறுதியளித்த பிறகு என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன், ஏனேன்றால் யூத் பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக சிறப்பாக நடத்திய அனுபவம் இருவருக்குமிருப்பதால் இவர்கள் ஆலோசனையும் கிடைக்குமென்பதால் மனது ஆறுதலடைந்தது.

ஞாயிறு அதிகாலையில் எழுந்து சென்னையில் இருந்து வந்த நண்பர்களை வரவேற்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் சென்று குளித்து புத்துணர்ச்சியுடன் அரங்கம் சென்றால் அங்கே ஜோதிஜி நேரமாகி விட்டதே எனக் கையைப் பிசைந்து கொண்டு நின்று கொண்டிருந்தார், ஒரு சில டிப்ஸ்களை எங்களுக்கு கொடுத்து கொண்டிருக்கும் போதே தொழிற்களம் நிறுவனரும் வர சரியாக விழா குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கியது.

அரங்கில் எங்களுக்கு முன்னே அமர்ந்து இருந்த கோவைநேரம் ஜீவா, கோவை மு. சரளா, உலக சினிமா ரசிகன் பாஸ்கரன், நிகழ்காலத்தில் சிவா ஏனேயோர் அமர்ந்திருக்க நிகழ்ச்சி தொடங்கியது.

சிறப்பு விருந்தினர் திருப்பூரைச் சார்ந்த சிறந்த இலக்கிய எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள் அமர்ந்திருந்தார்.

அறிய சாதனை புரிந்த எளிய மனிதர்

30நூல்கள், 7நாவல்கள்,15சிறுகதைத் தொகுப்புகள்,2குறுநாவல் தொகுப்புகள்,2கட்டுரைத் தொகுப்புகள்(வெளிநாட்டுப் பயண அனுபவ நூல் உட்பட) எழுதியுள்ளார்.  

சிறந்த சிறுகதைக்கான இந்திய சனாதிபதி வழங்கிய கதா பரிசு(1993),  
 • சாயத்திரை என்கின்ற நாவலுக்கான தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு குமுதம் ஏர் இந்தியா நடத்திய இலக்கிய போட்டியில் சிறந்த குறுநாவலுக்கான பரிசு பெற்று இங்கிலாந்து,ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றிருக்கின்றார்
  • கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 2002ம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான பரிசு. “பிணங்களின் முகங்கள்” என்கின்ற நாவலுக்காக.  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கிய பெருமன்றம் வழங்கிய பரிசுகள்
  • திருப்பூர் தமிழ்ச்சங்க பரிசு

  • இவருடைய எழுத்துகள் ஆங்கிலம்(சாயத்திரை). இந்தியிலும் மளையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

  • படைப்புகள் பல பல்கலைக்கழகங்களில் பாடநுல்களாகி உள்ளன. மளையாளம்,தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், மற்றும் ஹங்கேரியன் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
  • கனவு இலக்கிய இதழை 25 வருடமாக நடத்தி வருகிறார்.
  • குறுப்படங்கள் திருவிழா, சோற்றுப்பொட்டலம், சுமங்கலி அதுமட்டுமின்றி சாகித்ய அகடாமியின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

  தொழிற்களம் நண்பர்கள் மற்றும் கோவை.மு.சரளா அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட விழா ஆரம்பிக்கப்பட்டது

  சிறப்புரையாக ஈஸ்வரன் சீனிவாசன் அவர்கள் தன்னைப்பற்றி சுருக்கமாக அறிமுக உறையை தொடங்கி நான் ஒரு மில் தொழிலாளியின் மகனாக பிறந்து வணிகத்தில் நிலை நிறுத்திய உழைப்பின் பெருமையைக் கூறி உரையை நிறைவு செய்தார்.

  சிறப்பு விருந்தினர் சுப்ரபாரதிமணியன்

  தற்காலத்தில் இணையம் என்பது ஒரு மாறுபட்ட ஊடகமாக வளர்ச்சியடைந்துள்ளது. இது ஒரு வளர்ச்சி அன்றைய காலக்கட்டத்தில் ஜெயகாந்தன்,ஜானகிராமன்,இலக்கிய எழுத்தாளர்கள் மையமாகவும் அவர்களைச் சுற்றி வாசகர் வட்டங்கள் இருந்தன…

  ஜெயகாந்தன் பிராமணராக இல்லையென்றாலும் பெரும்பாலும் அவர்களைய எழுத்து பிராமண சமூகத்தைச் சார்ந்தே இருந்தது என்றாலும் அனைத்து மக்களிடமும் சேர்ந்தது. மேட்டுகுடி மக்கள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த காலம் சென்று தலித் இலக்கியம் தோன்றியது தலித் மக்களைப் பற்றி நிறைய எழுத ஆரம்பித்தார்கள், அதன்பிறகு நிறைய எழுத்தார்கள் உருவாகினார்கள்…

  இன்று இணையத்தில் எழுபவர்கள் அனைவரும் ஒரு மையத்தின் வாசகர்களாக இருந்தவர்கள் இன்று தானே ஒரு எழுத்தாளர்களாக மாறி அனுபவம், புனைவு, சிறுகதை, கவிதை எனப்படைத்து தாங்களும் ஒரு எழுத்தாளர்களாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள்.

  கவிதை செய்யுள் நடையில் இருந்து மாற்றமடைந்து புதுக்கவிதையாக மாறிய போது சாமாணியர்களும் கவிதை படைத்தனர், இந்த மாதிரி புதுக்கவிதை எழுதுவபர்கள் கோவையில் வானம்பாடிகள் என்று ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்தார்கள்

  அங்கிருந்து நிறைய கவிஞர்கள் தோன்றினார்கள் படைப்பிலக்கியத்தில் தனிப்பெரும் சாதனை நிகழ்த்தினார்கள் அது போல இந்த தமிழ்ச்செடியும் பல எழுத்தாளர்களை உருவாக்கி இணைய உலகில் தனிப்பெரும் இயக்கமாக தழைக்க வேண்டும் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
  அடுத்ததாக உரையாற்றிய தேவியர் இல்லம் ஜோதிஜி மாறி வரும் பொருளாதாரச் சூழல் மூலம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஆங்கில மொழி என்பது என்ன தாக்கத்தை உருவாக்குகின்றது. அதன் பாதிப்புகளை எப்படி நாம் கடந்து வந்து கொண்டு இருக்கின்றோம். எதிர்காலத்தில் நமது குடும்பங்களில் எந்த விதமான மாறுதல்கள் உருவாக்கும் என்பதைப் பற்றி எடுத்துரைத்தார்.

  விழவில் மெட்ராஸ்பவன் சிவகுமார் நிமிட நேரத்தில் விழா கதாநாயகனாக மாறிப்போனார். மேடைப்பேச்சு போன்று இல்லாது அவரது இயல்பான உரையாடலும் எதார்த்தமான பேச்சும் கைதட்டலையும் ஆச்சரியத்தையும் அள்ளிக்குவித்தது.

  எனக்கு தமிழ்ல ழகரம் லகரம் தெரியாது....! ஆனா மன்மோகன்சிங்கை சிரிக்க வைக்கமுடியும், ஆங்கிலம் நமக்கு சோறு போடும் பசியாறிய பிறகு நீங்க தமிழ் வளர்க்கலாம், தமிழ் மட்டும் படிப்பதால் வாழ்க்கையில் சாதிக்க முடியாது ஆனால் தொழிலதிபர்களாக இருப்பவர்கள் தமிழ் படித்தால் போதும் அவர்களுக்கு தொழில் சோறு போடும்! படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தமிழ் ஒரு காலத்திலும் உதவாது, வாகண எண் தமிழ்ல போட்டிருக்கறாங்க...! ழ..வ...ன்னு காவலர்கள் படிப்பதற்குள் அவன் ஊரை விட்டே போயிருவான் எல்லாரும் தமிழ்ல பேசி தமிழ் எண்களை பயன்படுத்தினால் நானும் பயன்படுத்துகிறேன்.

  அடுத்தது தமிழன் தமிழனையே கிணடலடிப்பான் ரோட்டுல எச்ச துப்பினா தமிழன் அப்படிம்பான் அப்ப வடக்கத்தியவர்கள் போட்டுத்துப்பும் பான்பராக் எச்சில் ஆறாக ஓடுதே அதற்கு என்ன சொல்வது...?

  அதே மாதிரி கணினித் துறையில் உள்ள பெண்கள் பப்புக்கு போறாங்க..., சிகரட் குடிக்கிறாங்க..., அப்படிங்கிறாங்க...!எனக்கு தெரிந்து என்னுடன் வேலை பார்க்கும் எந்த தமிழ்ப் பெண்ணும் செய்வதில்லை, வடக்கத்திய பெண்கள் பொது இடத்தில் சிகரட் குடிக்கிறாங்க! அதை நான் செய்யக் கூடாதுன்னு சொல்லலை...!

  அது அவர்களின் சுதந்திரம்! அதுல நான் தலையிட முடியாது, அவர்களைப்பார்த்து சில தமிழ்ப் பெண்கள் அவர்களைப் போல் மாறிவிடுகின்றார்கள். அதைத்தான் தவறு என்று சொல்கின்றேன்.

   “புலியப் பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்ட மாதிரி இருக்கு” அப்படின்னு சொல்றேன் என்று சிவக்குமார் தன் கருத்துகளைக் கூற சில கருத்துகளை மறுத்து கோவை மு சரளா விளக்கமளிக்க இருவருக்கும் ஆரோக்கிய விவாதம் உருவானது.

  நாங்க கொஞ்சம் மிரண்டு போக ஜோதிஜி குறுக்கிட்டு சிவக்குமார் சரளா இருவரின் கருத்துகளும் சரியானதே...! என்று விளக்கம் தந்து அது குறித்த நடைமுறை எதார்த்தம் என்பதையும் நாம் செய்தே ஆக வேண்டிய கடமைகளையும் அழகான் தன் அனுபவ உதாரணங்கள் மூலம் சொல்லி அந்த விவாதத்தை இயல்பாக முடித்து வைத்தார்.

  மிகச்சிறந்த இலக்கிய எழுத்தாளரான சுப்ரபாரதிமணியன் “சிவக்குமார் நீங்க நல்லா பேசுனீங்க” என்று தன் பாராட்டைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

  அடுத்து உரையாற்றிய நிகழ்காலத்தில் சிவா பணம் மட்டுமே நம்மை முன்னேற்றும், பணம் சம்பாரிச்சா தானா தமிழ் வளரும், பொருளாதாரத்தில் உயர் நிலையில் இருந்தால் மட்டுமே நாம் தமிழுக்கான சேவையை செய்யமுடியும், பசி,பட்டினியோடு ஒரு போதும் தமிழ் வளர்க்கமுடியாது அதனால் பொருளாதாரத்தில் தமிழர்கள் உயர்வடைய வேண்டும் என்று கூறினார்.

  நவம்பர் மாத (2012) சிறந்த வலைபதிவராக தேந்தெடுக்கப்பட்ட திரு. நா.மணிவண்ணன் அவர்களுக்கு தமிழ்ச்செடி விருது நினைவு பரிசாக அமரர் கல்கியின் காலத்தால் அழியாத தமிழின் மிகச்சிறந்த படைப்பான “பொன்னியின் செல்வன்” ஐந்து தொகுதியும் ஒரே புத்தகமாக உயர்திரு சுப்ரபாரதிமணியன் அவர்களால் வழங்கப்பட்டது. மற்றும் நினைவு கேடயத்தை தேவியர் இல்லம் ஜோதிஜி அவர்கள் வழங்கினார்கள் .

  மணிவண்ணனின் ஏற்புரையில் நான் இதற்கு தகுதியானவன் என்று சொல்ல முடியாது. ஆனால் நான் இன்னமும் என்னை தகுதிப்படுத்திக் கொள்ள, தரமான எழுத்துக்களை தர இந்த விருது எனக்கு உதவும் என்றார். முப்பது வருடம் இலக்கிய எழுத்தாளர் ஒருவர் கையில் விருது வாங்கியது என்னை இன்னும் சிறப்பாக எழுத வேண்டும் என்கின்ற உத்வேகத்தைத் தருகின்றது என்று கூறினார்.

  கேட்டால் கிடைக்கும் குழுமத்தில் பல விழிப்புணர்வு பதிவுகளை தந்த சரவணபிரகாஷ் அவர்கள் மற்றும் சில நண்பர்கள் வந்திருந்து விழாவைச் சிறப்பித்திருந்தார்கள்.

  நன்றியுரையை இரவு வானம் சுரேஷ் மற்றும் திரு.சசிமோகன் வழங்க விழா சிறப்புடன் நிறைவுற்றது

  சிறப்பாக தொகுத்து வழங்கிய தொழிற்களம் திரு அருண்  மற்றும் தொழிற்களம் குழவினர் அனைவருக்கும் தமிழ்ச்செடி நண்பர்கள் சார்பாக  எங்கள் மனமார்ந்த நன்றிகள்...! இதுவொரு சிறிய விதை. ஒரு விழாவிற்கான எந்த பிரமாண்டமும் இல்லாது இயல்பாக பரஸ்பரம் நல்ல விதைகளை தூவ எடுத்த முயற்சி இது. இனி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இரண்டு பதிவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இது போன்ற கௌரவம் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்ச்செடி முடிவு எடுத்துள்ளது.

  அதிக நண்பர்களை அழைக்க முடியாத போதிலும் வந்திருந்த அத்தனை பேர்களும் மனத்திருப்தியோடு குறிப்பாக கலந்து கொண்ட பெண்கள் இதுவொரு நம்பிக்கை தரக்கூடிய இயல்பான விழாவாக இருந்தது என்றதே தமிழ்ச்செடிக்கு கிடைத்த அங்கீகாரமாக கருகின்றோம்.

  வாழ்த்துரைத்த, வந்து கலந்து கொண்ட, வாழ்த்து மடல் அனுப்பி அத்தனை நல்ல இதயங்களுக்கும் எங்கள் நன்றி.  அடுத்த விழாவில் சந்திப்போம்.

  தமிழ்செடிக்காக 
  வீடு சுரேஸ்

  16 கருத்துரைகள்:

  இரவு வானம் on 12/10/2012 said...

  அருமையாக தொகுத்திருக்கிறீர்கள், நன்றி

  தமிழ்வாசி பிரகாஷ் on 12/10/2012 said...

  தமிழுக்காக பதிவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது.

  மேலும் மேலும் விழாக்களும், எழுத்தாளர்களுக்கு அங்கீகாரமும் கிடைக்க தொடர்ந்து முயற்சி எடுங்கள் குழுவினரே...

  பட்டிகாட்டான் Jey on 12/10/2012 said...

  சுரேஷ் விழாவுக்கு வரலைனாலும், இந்த பதி படிச்சி நேர்ல பார்த்த மாதிரி இருந்தது. வாழ்த்துகள். வருசா வருசம் தொசர்ந்து சத்துங்கப்பா.

  படத்துல இருக்கிர சிலபேர் பெயர் தெரியலை. இங்கே பொதுவில சொல்ல தயக்கம் இருந்தால் படத்துடன் பெயர்களும் மின்னஞ்சலில் தெரிவிக்கவும்.

  J.P Josephine Baba on 12/11/2012 said...

  வாழ்த்துக்கள் நண்பர்களே.

  Philosophy Prabhakaran on 12/11/2012 said...

  முதலில் விழாக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்...

  குறிப்பாக வீடு சுரேஷிடம் "மேனேஜரியல் ஸ்கில்ஸ்" அதிகமாக இருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது...

  தமிழன் தமிழனையே கிண்டலடிப்பான்னு தமிழனை கிண்டலடித்திருக்கும் தமிழனை என்ன செய்யலாம்...

  மணிவண்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்... முந்தய நாள் இரவு சரக்கடித்துவிட்டு மறுநாள் காலையில் மணி ஹேங் ஓவரோடு எப்படி ஏற்புரை கொடுத்திருப்பார் என்று நினைக்கும்போதே சிரிப்பு வருது... இதையெல்லாம் பார்க்க கொடுத்து வைக்கலியே...

  பட்டிக்ஸ் குறிப்பிட்டது போல குழுவினர் புகைப்படத்தில் பெயர்களை குறிப்பிடவும்... முக்கியமாக அந்த சசி தம்பி யாருன்னு சொல்லுங்க...

  cheena (சீனா) on 12/11/2012 said...

  அன்பின் நண்பர்களே ! விழா சிறப்பாக நடைபெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி - சிறந்த வலைப்பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நா.மணிவண்ணனுக்குப் பாராட்டுக்ளுடன் கூடிய நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  புலவர் சா இராமாநுசம் on 12/11/2012 said...


  விழாபற்றிய விளக்கமான பதிவும் படங்களும் அருமையாக உள்ளன.இப்பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன்! நன்றி!

  N.Mani vannan on 12/11/2012 said...

  வாழ்த்திய உள்ளங்களுக்கும் தமிழ் செடிக்கும் எனது அன்பும் நன்றிகளும்

  வே.நடனசபாபதி on 12/11/2012 said...

  நவம்பர் மாத சிறந்த வலைப்பதிவாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு நா. மணிவண்ணன் அவர்களுக்கும், ‘தமிழ்ச்செடி’யின் முதல் விழா சிறப்பாக நடந்தமைக்கும், உளமார்ந்த வாழ்த்துக்கள்!

  ஜோதிஜி திருப்பூர் on 12/11/2012 said...

  குறிப்பாக வீடு சுரேஷிடம் "மேனேஜரியல் ஸ்கில்ஸ்" அதிகமாக இருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது...

  பிரபா என்னுடைய வெளியாகப் போகும் பதிவை படிக்கும் போது உங்கள் சந்தேகம் தீரும்.

  கலாகுமரன் on 12/12/2012 said...

  விழாவிற்கு வர இயலாது போனாலும் விரிவான நிகழ்வுகளை அறிந்து கொண்டேன்.பாரட்டுக்கள். மேன் மேலும் தமிழ்செடி தளைத்தோங்க எனது வாழ்த்துக்கள்.

  சரவண பிரகாஷ் on 12/18/2012 said...

  அழகுக்கு அழகு சேர்த்தது
  அருமையான தங்கள் தொகுப்பு.......
  நன்றி

  கோவை மு சரளா on 1/31/2013 said...

  நேரில் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் எதார்த்த எழுத்துகளில் விழாவை சிறப்பாக எழுதிய நண்பருக்கு வாழ்த்துக்கள் தமிழ் செடி மரமாக வளரட்டும்

  Ranjani Narayanan on 1/31/2013 said...

  வலைச்சரம் மூலம் இங்கு வந்தேன். முதலில் வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

  விழாவை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். திரு சிவகுமாரின் பேச்சு நன்றாக இருந்தது.
  ஆரோக்கியமான விவாதம் சந்தோஷத்தைக் கொடுத்தது.

  பாராட்டுக்கள்!

  இராஜராஜேஸ்வரி on 1/31/2013 said...

  தமிழ்ச்செடியின் வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

  Anonymous said...

  வணக்கம்

  இன்று உங்களின் படைப்பு வலைச்சரத்தில் அறிமுகமானது வாழ்த்துக்கள் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு என்பது ஒரு கடினமான விடயம் இருந்தாலும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது பார்க்கும் போது. எழுத்துலகில் மேலும் வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

   

  மேலே செல்