2/6/13

ஒச்சப்பனும் நானும் .. நம் தாய்மொழிகளும்-தருமி


னக்கும் ஒச்சப்பனுக்கும் நடந்த சில கருத்துப் பரிமாற்றங்களை, தேவை கருதி, உங்கள் முன் வைக்கிறேன்.



1830-ல் உருவான பெல்ஜியத்தின் அண்டை நாடுகள் நெதர்லேண்டு. ஜெர்மனி,. ப்ரான்ஸ், லக்ஸம்பெர்க். கிறித்துவர்களின் இரு கூறுகளின் நடுவே நடந்த குழப்பங்களால் இந்நாடு தனியாகப் பிரிந்தது. அப்போது பிரஞ்சு மொழிதான் அரசியல் மொழியாக இருந்தது. அரசியல், வகுப்பு வாத வேறுபாடுகள் பலவும் இருந்த இந்த நாட்டில் பின்னாளில் மொழியும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தின. 

1970 வரை ஒன்றாக இருந்த பெல்ஜியம் இந்தப் பிரச்சனைகளால் எழுந்த பல அரசியல் சிக்கல்களினால் பெடரல் ஸ்டேட்டாக மாறியது. இப்போது இது மூன்று பிரிவுகளாக உள்ளன: வடக்குப் பகுதியில் டச் மொழி பேசும் ஃபாளண்டர்ஸ்; தெற்குப் பகுதியில் பிரஞ்சு மொழி பேசும் வல்லோனியா; இரண்டிற்கும் நடுவில் இரு மொழி பேசும் ப்ருசல்ஸ். பிரிவுகளாக இருந்தாலும் பெல்ஜியம் ஐரோப்பிய யூனியனில் நல்ல பொருளாதார மேம்பாட்டோடு இருக்கிறது.

ஃப்ளாண்டர் மொழி பேசுவோர் ஃப்ளெமிஷ் என்று அழைக்கப்படுகிறார்கள். (நம் ஒச்சப்பன் இந்தக் குழுவைச் சார்ந்தவர்.) தங்கள் மொழி அதிகம் பேசப்படாமல், போற்றப்படாமல் பிரஞ்சு மொழிக்கே அதிக முக்கியத்துவம் இருந்த நிலையை தங்களது மொழிப்பற்றால்  முற்றாக மாற்றினர். இப்போது பிரஞ்சு மொழிக்கு முக்கியத்துவம் இழந்து ஃப்ளாண்டர்ஸ் மொழியே முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஒச்சப்பன் ஒருவன் தன் மொழியை இழந்தால் அவனது பழம் பண்பாடு, சமூகக் கட்டுக்கோப்பு, ஒற்றுமை, கலாச்சாரம் எல்லாவற்றையும் இழந்து விடுவான். அது அந்த சமூகத்தினை முற்றாக அழித்து விடும் என்கிறார். இந்த உணர்வுகளை ஊக்குவித்த பின்பே ஃப்ளாண்டர்ஸ் மொழி வலுப்பெற்று இன்று எங்களின் தாய்மொழியை நாங்கள் காப்பாற்றியுள்ளோம் என்கிறார்.
அவர் எங்கள் நாட்டில் நடந்த மொழிப் பரிணாம வளர்ச்சி அப்படியே மாறி, எதிர்த் திசையில் உங்கள் தமிழ்நாட்டில் நடக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார். இங்கே ஆங்கிலத்தின் பின்னாலேயே எல்லோரும் ஓடுகிறீர்கள். அது மட்டுமின்றி ஆங்கிலம் அறிந்தோர் தமிழ் மட்டும் தெரிந்த தமிழர்களை குறைவாகக் கருதுகிறீர்கள். அந்த பாவப்பட்ட தமிழர்களும் ஆங்கிலத்தைப் போற்றுவதையும் பார்க்க முடிகிறது. இது ஒரு சமூகத்தின், அதன் கலாச்சாரத்திற்கு அடிக்கப்படும் ஒரு சாவு மணி என்பதை உங்கள் சமூகம் புரிந்து கொள்வது நல்லது.

அரசு இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். தமிழ் பயிற்று மொழியாக வேண்டும். தமிழ் தெரிந்தோருக்கே அரசு வேலைகள் என்ற கொள்கையை அரசு எடுக்க வேண்டும் என்கிறார். இதற்காக அவர் எனக்கு எழுதிய மயிலின் நகலை இங்கே கீழே கொடுத்துள்ளேன்.


Dear Sam,

The Sint-Lievens College was founded in 1930 for the insight and the deployment of Lieven Gevaert (Afga-Gevaert), an industrialist with an eye for social and Flemish needs for Dutch school education. The pride of your own mother-tongue, Dutch was the key for the revival of the Flemish culture, dominated for years by French invasions and domination,which chased away very famous Dutch writers from Antwerp (Belgium) to the Netherlands. Nowadays Flanders grew out to a strong region at the top of world technology, proud leaving behind the French hegemony.

Remarkable reverse evolution happens in Tamil Nadu, people are dominated by the foreign language, English. It is considered English-speaking ones are  the elite of Tamil society. Many such are not able anymore to read or write their own mother-tongue Tamil,  making them foreigners in their own land, alienated from their own culture, looking down on their origin and the common Tamilians as lower caste, copying the English, and exploiting other non-English-speaking Tamils in a worse way. They can't be called proud Tamilians anymore as they chose to reject all Tamil values and its tradition and culture, not aware that they lost their personal-identity. They may praise themselves lucky for the tolerance of the majority Tamils.

Only the Tamil government can preserve their culture by making Tamil a compulsory medium of education. Tamil is one of the oldest languages and still remains as a spoken classical language, with its great Tamil culture, traditions and great jewels of Tamil literature. The more languages you know the more cultures you understand. But  you have an identity only when you master your own mother-tongue. A proud Tamil should know his language and his culture.


Greetings
Henk

நன்றி: உயர்திரு.தருமி அவர்களின் வலைத்தளத்தில் இருந்து மறுபதிப்பு.

வலை தளம் : தருமி

1 கருத்துரைகள்:

ReeR on 2/12/2013 said...


ஊச்சப்பன் என்றதும் .... 4 வருடங்களுக்கு முன்னர் பேசியதுதான் நினைவுக்கு வருகிறது...

அதுவும் எனக்கு மதுரையில் உறவினர் இருக்கிறார்கள் என்று தமிழே தெரியாமல் சொன்ன வார்த்தை எனக்கு முதலில் புதிராக இருந்தது..

பின் அவரை கொஞ்சம் தெரிந்து கொண்டேன்.

இப்பொழுது கொஞ்சம் நல்ல தெரிந்து கொண்டேன்..

நன்றி

www.padugai.com

thanks

 

மேலே செல்